சூப்பர் ஸ்டார் --- 2 செய்திகள்
இந்த வார ஆனந்த விகடனில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் பாலிவுட்டில் ஸ்பீல்பர்க்-க்கு இணையாகக் கருதப்படும் ராம் கோபால் வர்மா ஆகியோரின் பேட்டிகள் வெளி வந்துள்ளன.
1. அமிதாப் தன் பேட்டியில், நம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் சிவாஜி திரைப்படத்தில் தனக்கு ஒரு வேடம் தருமாறு தன் நீண்ட நாள் நண்பரான ரஜினியை கேட்டுக் கொண்டிருக்கிறார் ! அவர் கூறியிருப்பதாவது:
"ரஜினி சாப் ! உங்களோடு நடிச்சு ரொம்ப வருஷமாச்சு. புதுப்படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா ? அட்லீஸ்ட் ஒரு சின்ன ரோலாவது கொடுங்களேன், ப்ளீஸ் !"
2. அடுத்து வர்மா ரஜினியைப் பற்றி, "இன்றைய இந்திய சினிமாவில் அவர் தான் ரியல் ஹீரோ! வெறுமனே திரையில் ரஜினி தோன்றினாலே அப்படி ஒரு காந்த சக்தி அவருக்கு இருக்கிறது. ஷார்ப்பான பாடி லாங்குவேஜ் ! .... சின்னப்பிள்ளைகள் வரை ரசிகர்களைச் சேர்த்து வைத்திருக்கிறாரே, சிம்ப்ளி கிரேட் ! .... அவரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும். அது தான் என் பர்சனல் விருப்பம்!" என்று வியப்பில் ஆழ்ந்து பாராட்டுகிறார்.
அது தான் 'ரஜினி' என்னும் PERENNIAL மேஜிக் !!! மேலும், பாலிவுட்டின் ஜாம்பவன்களான இவ்விருவரும் போல பலரும் தென்னக சூப்பர் ஸ்டார் மீது வைத்திருக்கும் மதிப்புக்குக் காரணம், அவரிடம் காணப்படும் எளிமையும், இனிமையாகப் பழகி நட்பு பாராட்டும் பாங்கும், கர்வமின்மையும், தன்னடக்கமும் தான் !!! 'சிவாஜி'யில் AVM, ரஜினி, சங்கர், ரஹ்மான் ஆகிய நால்வர் கூட்டணி அமைய இருப்பதால், அத்திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றில் (in all aspects) ஒரு மாபெரும் மைல் கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி: ஆனந்த விகடன்
பி.கு: திட்டுவதற்கென்றே வருகை தந்திருக்கும் (சில!) கனவான்களே, (நாவடக்கமா) திட்டி விட்டுப் போங்க, ஏனெனில், "யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்று வள்ளுவம் கூறுகிறது ;-)
12 மறுமொழிகள்:
பி.கு: திட்டுவதற்கென்றே வருகை தந்திருக்கும் (சில!) கனவான்களே, (நாவடக்கமா) திட்டி விட்டுப் போங்க, ஏனெனில், "யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்று வள்ளுவம் கூறுகிறது ;-)
பாலா நீங்கள் உண்மையிலேயே ஒரு புத்திசாலிதான்.இதற்கு மேல் எதையுமே சொல்ல முடியாதே!உங்கள் மேற்படி எழுத்தினால்...
//பாலிவுட்டில் ஸ்பீல்பர்க்-க்கு இணையாகக் கருதப்படும் ராம் கோபால் வர்மா
Wow !!!
பாலாஜி,
வம்புக்கிழுக்குறதுக்குன்னே ஒரு பதிவு போட்டு அது தெளிவா புரியட்டும்னு ஒரு பின் குறிப்பும் போட்டிருக்கிறீர்...
வேறென்ன சொல்ல...நடத்துங்க
அன்புடன்...ச.சங்கர்
Dear சங்கர்,
//வம்புக்கிழுக்குறதுக்குன்னே ஒரு பதிவு போட்டு அது தெளிவா புரியட்டும்னு ஒரு பின் குறிப்பும் போட்டிருக்கிறீர்...
//
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. முன்னொரு முறை, சந்திரமுகியில் ரஜினியின் சம்பளம் பற்றி வந்த செய்தியைப் பதிவாகப் போட்டவுடன், சில ஆபாச பின்னூட்டங்கள் வந்தன. அதனால் தான் பின்குறிப்பு போட வேண்டிய நிர்பந்தம் !!!!
மேலும், ரஜினி பற்றி நல்லதாக எதை எழுதினாலும், ரஜினி பேரை எடுத்தாலேயே பயங்கர கடுப்பாகும் ஒரு சிறு கும்பல், பாய்வதற்கு எப்போதும் தயார் நிலையில் இருப்பாதாலும், டிஸ்கிளெய்மர் அவசியமாகிறது.
ரஜினி பற்றிய செய்தியை போட்டு, அது குறித்து என் கருத்தை கூறியுள்ளேன். மாற்றுக் கருத்து இருப்பவர்கள் 'ரீஜண்டாக' பின்னூட்டமிடுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை !!!
--- எ.அ.பாலா
http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=75587
After Priya - Rajini - Sujatha combo ? in Sivaji ?
- Alex
Source: Kalki
http://www.dinamalar.com/2005sep05/kalki.asp
ரஜினியும் ஷங்கரும், "இந்தியனு'க்கு முன்பே இணையவிருந்த நிலையில், அப்போதே பேசித் தேர்வு செய்யப்பட்ட டைட்டில்தான் "சிவாஜி'. ஆனால் ஷங்கர் தேர்வு செய்த கதையைப் போன்ற சாயலோடு தெலுங்கு, ஹிந்தியில் தலா இரண்டு படங்கள் வந்துவிட, அப்போதைய முயற்சியைக் கைவிட்டு விட்டார்களாம். இந்த முறை சிட்னி ஷெல்டனின் நாவல் (கடந்த பிறவியின் ரகசியத்தை அறிய முயற்சிக்கும் ஹீரோவுக்கு ஏற்படும் பிரச்னைகள்) ஒன்றுக்கு அற்புதமாக தமது மெசேஜ் ஸ்டைல் பூச்சைக் கொடுக்கப்போகிறார் ஷங்கர் என்கிறது அவரது நட்பு வட்டாரம். இதில் ரஜினி போடும் பல கெட்அப்புகளில் ஒன்று பேருந்து நடத்துனர் என்று அடித்துச் சொல்கிறார் கதை விவாதத்துக்கு அழைக்கப்பட்டிருக்கும் ஒரு வி.ஐ.பி. கதாசிரியர்.
-----------------
(A)V M தயாரிப்பில் அடுத்து நடிக்கவிருக்கும் சூப்பர் ஸ்டார் பற்றி செய்தி போட்டமைக்கு நன்றி பாலா
அப்படியே KBC ல host செய்ய நம்ம சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சான்ஸ் கொடுத்தா...
லாபம் நம்ம சூப்பர் ஸ்டாருக்கு இல்ல.. "ஸ்டார்" டீ வி க்கு தான்.. :)
'சிவாஜி' - அந்த 'மராத்தா' சிவாஜியைக் குறிப்பது போல வைக்கப்பட்டிருக்கிறதாம்! (என்ன இருந்தாலும் 'பிறவிப் பாசம்' போகாதில்ல!)
மேலும், சிவாஜி தன் 'அன்னையின்' (ஜீஜாபாய்)மீது மிகுந்த பாசம் கொண்டவாராயிற்றே!
அதை வைத்து படத்தில் -
'அம்மா" போற்றி!'
'அம்மா வாழிய!'
' அம்மா வெல்க!'
'ஒரு வார்த்தே சொல்லும்மா! எல்லா எதிரிகளையும் தீத்துடறேன்!'
என்பன போன்ற உணர்ச்சி பொங்கும் வசனங்கள் இடம்பெறப்போவதாக ஒரு
VVIP 'உள்குத்து' உதவி இயக்குநர் கிசுகிசுக்கிறார்!
ம்ம்ம்ம்ம்! தேர்தல் வரப்போகுதே..நம்ம 'தலீவர்' 16 வருசப் பகைய மறந்து இப்போ 'உடன்பிறப்பா' மாறிட்டாருல்ல!
அப்போ இதயெல்லாம் எதிர்பாக்கலாம் போலதான் தோணுது! ;)
Post a Comment